aaythasiragugal - Pledge on Women and Society

 உறுதிமொழி

1. நான் வீட்டிலும், பள்ளியிலும், கல்லூரியிலும், வேலை செய்யும் இடத்திலும்,வேறு எங்கு சென்றாலும் பாதுகாப்பாக இருப்பேன். என் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துவேன்

2. நான் எப்பொழுதும் தைரியமாக, நல்ல உடல் நலத்துடன் இருப்பேன்

3. நான் பெற்ற கல்வியை இடைவிடாமல் கற்பேன், பிறருக்கும் கற்பிப்பேன்

4. என் உடல் – மனம் சார்ந்த மாற்றங்களை அறிந்து கொள்வேன்.

5. பிறர் என்னிடம் தவறாக நடந்து கொள்வதை எப்போதும் அனுமதிக்க மாட்டேன்

6. ஆணும் பெண்ணும் சமம் என்பதை அறிவேன். நான் யாருக்கும் அடிமை இல்லை. எனக்கு யாரும் அடிமை இல்லை.

7. என் பெயரையோ , புகைப்படத்தையோ , தவறாக பயன்படுத்தினால் பயப்பட மாட்டேன். இந்த சூழலில்,என் மீது தவறில்லை என்பதை நன்கு அறிவேன் .

8. என் நிறத்தை வைத்தோ , என் உருவத்தை வைத்தோ, கேலி செய்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

9. என் உரிமைகளுக்காக நான் என்றும் குரல் கொடுப்பேன் . கேள்வி கேட்பேன்.

10. மேற்சொன்ன உறுதிமொழிகளை எப்பொழுதும் பின்பற்றுவேன்.

Child Helpline - 1098

Women Helpline - 181



Comments

Popular posts from this blog

Aaytha Siragugal - Who we are? An Intro

Hat-Trick CSA Session - Part I

Work of the Year 2015